News January 20, 2026
₹44,900 சம்பளம்.. +2 போதும்: APPLY HERE

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 311 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law. வயது வரம்பு: 18 – 35. சம்பளம்: ₹19,900 – ₹44,900. இதற்கான விண்ணப்பம் ஜன.29-ல் முடிவடைகிறது. மேலும் தகவல் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News April 7, 2026
உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பவுனம்பாள்(60). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News April 7, 2026
தேமுதிக ஒரு பழுத்த மரம்: பிரேமலதா

விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிக காணாமல் போய்விடும் என்று கூறப்பட்ட விமர்சனத்துக்கு பிரேமலதா தற்போது பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், பழுத்த மரம் தான் கல்லடி படும்; அப்படித்தான் தேமுதிகவும் வளர்ந்து கூட்டணியில் சீட்டு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். விமர்சனம் செய்பவர்கள் வளரட்டும் என்று வாழ்த்திய அவர், எங்கள் மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை என்றார்.
News April 7, 2026
ராமதாஸ் – அன்புமணியை சேர்க்க வேல்முருகன் முயற்சி!

ராமதாஸுடன் அன்புமணியை சேர்த்து வைக்க, வேல்முருகன் முயன்று வருகிறார். தந்தை – மகன் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன், இருவரையும் ஒன்றிணைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அன்புமணி கூறிவிட்டதாகவும், விரைவில் இருவரும் இணைவார்கள் எனவும் வேல்முருகன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


