News January 20, 2026
அப்போ 40 வயசானா அவ்ளோ தானா?

நீங்கள் 40 வயதை நெருங்குகிறீர்களா? கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்களா? அப்படியென்றால் இச்செய்தி உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஒரு காலத்தில் அனுபவம், திறமையின் உச்சமாக 40 வயது கருதப்பட்டது. ஆனால் அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையால் தற்போது 40 வயதை தொட்டாலே கார்ப்பரேட்டில் பணிநீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் அவர்களை விட இளம் வயதினர் திறன்மிக்கவர்களாக கருதப்படுகின்றனர்.
Similar News
News January 28, 2026
சில பூச்சிகள் ரீங்காரம் இடுவது ஏன்?

தேனீ, சில வண்டுகளின் இறக்கைகள் நொடிக்கு சுமார் 150-250 தடவை சிறகடிக்கின்றன. காற்றின் உராய்வு அதிர்வினால் நமக்கு இந்த ஒலியானது ரீங்காரமாக கேட்கிறது. இதுவே ஒரு வண்ணத்து பூச்சியாக இருந்தால் எதுவும் கேட்காது. அதன் சிறகுகள் நொடிக்கு 6-10 தடவை மட்டுமே சிறகடிக்கின்றன. இதே கொசுக்கள் என்றால், அவை நொடிக்கு சுமார் 400-800 முறை சிறகடிப்பதால் காதின் அருகில் வந்தால் மட்டுமே ’கொய்ங்’ என்ற சப்தம் கேட்கிறது.
News January 28, 2026
விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

தேர்தலையொட்டிய கட்சித் தாவல் நிகழ்வுகளால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், அதிமுகவின் அரியலூர் முகமாக இருந்த கவிதா G.ராஜேந்திரன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக அரியலூர் மாவட்டச் செயலாளர், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.
News January 28, 2026
வைரலாகும் அஜித் பவார் ட்வீட்

மகாராஷ்டிராவில் DCM அஜித் பவாரும், பெண் விமானி ஷாம்பவி பதக்கும் விமான விபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் பவார் செய்த டிவீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ‘நாம் செல்லும் ஹெலிகாப்டர் அல்லது விமானம் சீராக தரையிறங்கினால், அது பெண் விமானி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் #NCPWomenPower என்ற ஹேஷ்டேக்கை கொடுத்துள்ளார்.


