News January 20, 2026
மணலூர்பேட்டை விபத்தில் இறந்தவர் புகைப்படம் வெளியானது!

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவின்போது மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே பலூன்களுக்கு நிரப்பப்படும் சிலிண்டர் வெடித்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலா என்பவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிரிழந்த கலாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி

திருக்கோவிலூர் அருகே ஆடூர்கொளப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் (19), கடந்த 27-ம் தேதி இரவு நண்பரை வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். சுந்தரேசபுரம் மேட்டு காலனி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின்பகுதியில் பைக் மோதியதில், சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: நடுரோட்டில் பற்றி எரிந்த நபர்

கள்ளக்குறிச்சி மூரார்பாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி குமார் 2மனைவிகளும் பிரிந்து சென்ற கவலையில் இருந்த அவர் , திருப்பூர் நத்தக்கடையூரில் கூலி வேலை செய்து வந்தார். மனவேதனையில் இருந்த குமார், கடந்த 28-ம் தேதி முத்தூர்-காங்கயம் சாலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயமடைந்த அவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று (ஜன.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


