News January 20, 2026

தமிழக அரசு Vs தமிழக கவர்னர்

image

திமுக ஆட்சியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக RN ரவி, சட்டப்பேரவை உரையை புறக்கணித்துள்ளார். 2021-ல் திமுக ஆட்சியமைத்த பிறகு, RN ரவி கவர்னராக பதவியேற்றார். 2022-ல் மட்டுமே அவர் உரையை முழுவதும் வாசித்தார். 2023-ல் சில பகுதிகளை தவிர்த்ததால் சர்ச்சையாகி பாதியில் வெளியேறினார். 2024, 2025-ல் தேசிய கீதம் பாடவில்லை என உரையை வாசிக்கவில்லை. இப்போது, <<18904228>>மைக் ஆஃப்<<>> செய்யப்பட்டதாக கூறி வெளிநடப்பு செய்துள்ளார்.

Similar News

News February 6, 2026

U19 WC: மகுடம் சூடுமா இந்தியா அணி

image

ஜிம்பாப்வேவில் நடக்கும் U19 உலகக் கோப்பை தொடரின் ஃபைனலில், இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இளம் படை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக காணப்படுகிறது. அதேநேரத்தில் நடப்பு தொடரில் இங்கிலாந்தும் தோல்வியை தழுவாமல் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. எனவே, போட்டி கடுமையானதாக இருக்கும். போட்டியில் இந்தியா வென்றால் 6-வது முறையாக மகுடம் சூடும்.

News February 6, 2026

பிஹார் தேர்தல் செல்லாது: பிரசாந்த் கிஷோர்

image

பிஹார் தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தலில் விதிகளை மீறி ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கும் தலா ₹10,000 வழங்கப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தேர்தல் நியாயமான நடைபெறவில்லை எனக் கூறி சட்டப்பேரவை தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News February 6, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 6, தை 23 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

error: Content is protected !!