News January 20, 2026

தருமபுரி: பொங்கல் விழாவில் தகராறு – அதிமுக பிரமுகர் கைது!

image

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே மாதேஹள்ளியில் பொங்கல் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வேலாயுதம் என்பவரது குடும்பத்தினரை அதிமுக நிர்வாகி தர்மன் உள்ளிட்ட 6 பேர் தாக்கியுள்ளனர். பின், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், அதிமுக செயலாளர் தர்மன் உட்பட 6 பேர் மீது கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 6, 2026

தருமபுரி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

தருமபுரி மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 6, 2026

தருமபுரி: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். தருமபுரியை சேர்ந்தவர்கள் 1800-180-7788 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

தருமபுரி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க

image

தருமபுரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்

error: Content is protected !!