News January 20, 2026

திருவள்ளூர்: மனைவி பிரிந்ததால் தற்கொலை!

image

பொதட்டூர்பேட்டை அடுத்த கீச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(35). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளு உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார். இதனால், மன உளைச்சலடைந்த பிரசாத், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் பலனின்று உயிரிழந்தார்.

Similar News

News January 26, 2026

திருவள்ளூர்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

திருவள்ளூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். (நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News January 26, 2026

திருவள்ளுர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 26, 2026

திருத்தணி கோயிலுக்குச் செல்ல தடை!

image

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று(ஜன.25) பெய்த துாரல் மழையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், இன்று(ஜன.26) முதல் மூன்று நாட்களுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், வருகிற பிப்.1ஆம் தேதி தைப்பூசம் என்பதால், கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். எனவே, அன்று ஒரு நாள் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, கோயில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.

error: Content is protected !!