News January 20, 2026
விழுப்புரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?

விழுப்புரம்: திண்டிவனம் வட்டத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் ஜனவரி 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
Similar News
News January 29, 2026
காஞ்சி: ரவுடி கொடூரப் படுகொலை!

சின்ன கோட்டகுப்பம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு என்பவர் நேற்று(ஜன.28) மது அருந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த பத்திற்கும் மேற்பட்டோர் அவரைச் சுற்றி வளைத்து கொடூர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியதில் உடல் முழுவதும் காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 29, 2026
விழுப்புரத்தில் உடனடி வேலை! SUPER CHANCE

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி காலத்தில் உங்களுக்கு உதவித் தொகையும் உண்டு. மேலும் பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இங்கே <
News January 29, 2026
விழுப்புரத்தில் டாஸ்மாக் இயங்காது!

வடலூர் தைப்பூசதினத்தை முன்னிட்டு வரும் பிப்.1ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளிலும், கூடங்களும், தனியார் மது பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


