News January 20, 2026

கவர்னர் உரையே இனி இருக்காதா?

image

சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக கவர்னர் வெளியேறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை வாசிப்பு என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இது அமலுக்கு வர வலியுறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 22, 2026

புதுவையில் தனித்து போட்டியிடுகிறதா திமுக?

image

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், திமுக – காங்., கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. நேற்று மாலை வரை காத்திருந்தும் திமுகவை <<19446097>>காங்.,<<>> பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக இன்று CM ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் புதுவையில் தனித்து போட்டியிடலாமா என்றும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 22, 2026

பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் CPM

image

திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு CPM தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடந்த CPM மாநில குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொகுதி எண்ணிக்கை விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், CPM-ஐ இதுவரை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

News March 22, 2026

சரசரவென சரியும் வெள்ளி விலை!

image

கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹40,000 குறைந்துள்ளது. கடந்த 13-ம் தேதி சில்லறை விற்பனையில் கிராம் ₹290-க்கு விற்பனையான வெள்ளி, தற்போது ₹250 ஆக உள்ளது. அதேபோல், மொத்த விற்பனையில் 1 கிலோ ₹2,50,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 15% விலை சரிந்ததே, இந்த கடும் வீழ்ச்சிக்கு காரணமாகும். வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாம்.

error: Content is protected !!