News January 20, 2026

தி.மலை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

தி.மலை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

தி.மலை: மின்சார வாரியம் ஷாக்! பேரூராட்சி ராக்!

image

தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் மின்கமத்துடன் சேர்த்து வணிக வளாகத்திற்கு கான்கேர்ட் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் அருகில் பேரூராட்சி சார்பில் இரண்டு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் குறுக்கே மின்கம்பம் செல்வதால் அதோடு சேர்த்து கான்கேர்ட் போட்ட சம்பவம் ‘நீங்க வேற லெவல் சார்’ என்று சொல்லும்படி உள்ளதாக கிண்டல் அடித்து வருகின்றனர்.

News February 4, 2026

தி.மலை: பள்ளிக்கு சென்ற வேன் விபத்து- துடிதுடித்து பலி!

image

திருவண்ணாமலை அடுத்த திடீர் குப்பம் கிராமத்தில் நேற்று திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 4, 2026

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று (பிப்.4 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!