News May 6, 2024
வங்கி ஊழியரிடம் வழிப்பறி – 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரத்தைச் சேர்ந்த மனோவா (28). இவர் தனியார் வங்கியில் சுய உதவிக்குழு கடனை வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் நேற்று நெய்விளை அருகே பைக்கில் சென்றபோது 3 பேர் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 கிராம் தங்கச் செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மூவரை கைது செய்தனர்.
Similar News
News July 5, 2025
வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
News July 5, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

தூத்துக்குடி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <
News July 5, 2025
திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற ஜுலை 7ம் தேதி அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகின்ற ஜூலை 6ம் தேதி இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது மதுரை, விருதுநகர், நெல்லை தென்காசி வழியாக வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.