News May 6, 2024
தி.மலை: +2 தேர்வில் 99.2% தேர்ச்சி

தி.மலை +2 தேர்வில் 249 பழங்குடியின மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தி.மலை மாவட்டத்தில் உள்ள ஏகலைவா பள்ளி மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 251 மாணவ மாணவிகள் எழுதினர். அதில் 249 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். இந்த தேர்ச்சி 99.2% என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 3, 2026
தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News February 3, 2026
தி.மலையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News February 3, 2026
JUST IN: தி.மலை – அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த சாத்தனூர் வனப்பகுதி அருகே, விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் 70 வயது மூதாட்டி முத்தம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 17ம் தேதி அவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆடையை வைத்து அவரது பிள்ளைகள் உறுதிப்படுத்திய நிலையில், சாத்தனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


