News January 20, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் ஜன.21 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. மேலும் இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது .எனவே கீழப்புலியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
பெரம்பலூர்: 12th போதும்..அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
பெரம்பலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
பெரம்பலூர்: நாளை கிராம சபைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) தேதி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊராட்சிகளின் நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதர கோரிக்கைகள் குறித்து விவாதித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.


