News January 20, 2026

கோவில்பட்டி: மாமனாரை சரமாரியாக வெட்டிய மருமகன்

image

கங்கைகொண்டானை சேர்ந்த உலகநாதன் தனது மகள் செல்வியை(25) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாப்பாகுடியை சேர்ந்த கருப்பசாமிக்கு(30) திருமணம் செய்து கொடுத்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை உலகநாதன், செல்வி கயத்தாறுக்கு சென்ற போது அங்கு தகராறில் ஈடுபட்ட கருப்பசாமி அரிவாளால் உலகநாதனை வெட்டியதில் அவரது கட்டை விரல் துண்டானது.

Similar News

News January 27, 2026

தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை

image

இராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குமார்(22). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு பந்தல்கள் போடும் வேலை செய்து வரும் நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடியில் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் மின்னல் கொடி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட உணவு நிறுவனங்கள், கடைகள் என மொத்தம் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!