News January 20, 2026
இனிமேல் அமைதியை பற்றி யோசிக்க மாட்டேன்: டிரம்ப்

8 போர்களை நிறுத்த நடவடிக்கை எடுத்தும், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில், நோபல் பரிசு கிடைக்காததால் இனி அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை இல்லை. அமெரிக்க நலனை பற்றி மட்டுமே சிந்திக்க போவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
ஆட்சியில் பங்கு கொடுக்கும் மனம் CM-க்கு உள்ளது: SP

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி இல்லை, கேட்ட தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காலை உணவுத் திட்டம் கொண்டு வந்த CM-க்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் பெரிய மனது இருக்கிறது எனக் கூறிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது; ஆனால், கூட்டணி முடிவு குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.
News February 8, 2026
ராசி பலன்கள் (08.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 8, 2026
புத்தகப்பை சுமக்க வேண்டிய வயதில்… மாணவிக்கு அவலம்

TN-ல் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. சேலம், தலைவாசல் அருகே 17 வயதான பள்ளி மாணவி வயிற்று வலிக்காக ஹாஸ்பிடலுக்கு சென்றபோது, கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வலி அதிகமாகி அந்த மாணவிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்த கொடூரத்திற்கு காரணம், அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. தற்போது அவர் கம்பி எண்ணுகிறார்.


