News January 19, 2026
டெல்லியில் தமிழக பாஜக முக்கிய ஆலோசனை

டெல்லியில் பியூஷ் கோயல் இல்லத்தில் TN பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதிமுகவுடனான தொகுதி பங்கீடு, மோடியின் TN வருகை உள்ளிட்டவை குறித்து இதில் பேசப்பட்டுள்ளது. PM பங்கேற்கும் கூட்டத்தில் அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதால், அது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், L.முருகன், தமிழிசை, வானதி, H.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Similar News
News February 9, 2026
ரீபைண்ட் ஆயிலால் உயிருக்கு ஆபத்தா?

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மாற்றாக தற்போது சமையலுக்கு ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், ரீபைண்ட் ஆயில் தயாரிப்புக்கான கெமிக்கல் ப்ராசசிங் முறை, உட்கொள்பவருக்கு உயிரிழப்பு பாதிப்பை உண்டாக்கலாம் எனவும் இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் பலியாகின்றனர் என கேரள ஆயுர்வேதிக் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்க என்ன எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்?
News February 9, 2026
விசிக MLA-வுக்கு காங்கிரஸ் கண்டனம்!

உண்மையை அறியாமல், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கருத்து தெரிவித்ததாக <<19089939>>விசிக MLA பாலாஜிக்கு<<>> TN காங்., கண்டனம் தெரிவித்துள்ளது. ராமதாஸ் திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானது & திரிக்கப்பட்டது என்றும், ஃப்ட்ச்க்
News February 9, 2026
ஏப்., 2-வது வாரத்தில் தமிழக தேர்தல்.. வெளியானது UPDATE

TN-ல் ஏப்ரல் 2-ம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் வந்த அவர், பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தலுக்கு இன்னும் 65 நாள்களே இருப்பதால் அனைவரும் தீவிர களப்பணியாற்ற வேண்டும் எனவும், பாஜக மூத்த தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


