News January 19, 2026

ஒரே படகில் வைப் செய்த நயன்-த்ரிஷா

image

கோலிவுட்டில் 20 ஆண்டுகளை கடந்த பின்னும் கோலோச்சும் நடிகைகளாக நயன் தாரா மற்றும் த்ரிஷா உள்ளனர். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய படங்களிலும் இன்றும் கதாநாயகி அந்தஸ்துடன் வலம் வருகின்றனர். இந்நிலையில் இருவரும் நீண்ட நாள்களுக்கு பின் ஒரே நிற உடையில், கடலுக்கு நடுவே படகில் இருந்தபோது, கிளிக்கிய புகைப்படங்களை த்ரிஷா தனது x-ல் ’முஸ்தபா முஸ்தபா’ பாடலுடன் பதிவிட்டுள்ளார்.

Similar News

News February 18, 2026

பெண்ணின் மார்பகத்தை தொடுவதும் குற்றம்: SC தீர்ப்பு

image

மைனர் பெண்ணின் ஆடையை அவிழ்ப்பதும், அந்தரங்க இடங்களில் தொடுவதும் பாலியல் வன்கொடுமை குற்றமே என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. கடந்தாண்டு, 11 வயது சிறுமியின் மார்பகத்தை பிடித்து, அவரது பைஜாமாவை அவிழ்த்த குற்றச்சாட்டுகள் பாலியல் வன்கொடுமை செய்வதற்கான முயற்சி அல்ல என்று அலகாபாத் HC தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சர்ச்சைக்குரிய அலகாபாத் HC தீர்ப்பை SC ரத்து செய்தது.

News February 18, 2026

இது ’செல்பி’ கூட்டணி!

image

வெவ்வேறு கொள்கைகள் கொண்ட TN அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் காண்பது அரிது. இந்நிலையில் சீமான், திருச்சி சிவா, திருமாவளவன், தமிழிசை செளந்தரராஜன் என நான்கு வெவ்வேறு கட்சித் தலைவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி வைரலாகி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் திருச்சி சிவா எடுத்த இந்த செல்பியை ‘முறுவலிக்கும் முரண்கள்’ என குறிப்பிட்டு திருமா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News February 18, 2026

BREAKING: இந்தியா பேட்டிங்

image

நெதர்லாந்துக்கு எதிரான T20 WC லீக் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேலுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் இன்று களமிறங்குகின்றனர். லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி, இப்போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது.

error: Content is protected !!