News May 6, 2024

தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை

image

+2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க, மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு சுகாதாரத் துறை மூலம் 100 மனநல ஆலோசகர்கள் மனநலம் சார்ந்த ஆலோசனை வழங்கவுள்ளனர். சுழற்சிக்கு 30 ஆலோசகர்கள் வீதம், 3 சுழற்சியில் செயல்படுவர். மனநல ஆலோசனைகளுக்கு ‘104’ மற்றும் ‘14416’ ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News August 24, 2025

BIG BREAKING: வங்கி கடன்.. அரசின் HAPPY NEWS

image

முதல் முறையாக கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபருக்கு வங்கி கடன்களுக்கான குறைந்தபட்ச CIBIL ஸ்கோர் தேவையில்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், வங்கிகள் இனி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபரின் CIBIL ஸ்கோர் 0 ஆக இருந்தாலும், லோனை திருப்பி செலுத்துவதற்கான ஆவணங்களை மட்டும் ஆராய்ந்து லோன் வழங்க வேண்டும். தேவையில்லாத காரணங்களை கூறி விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 24, 2025

GPay, Phonepe பணத்துக்கு சிக்கலா? உடனே இதை செய்க

image

Gpay, Phonepe-ல தவறான நபருக்கு பணம் அனுப்பிட்டா, அத காந்தி கணக்குல எழுதவேண்டிய அவசியமில்ல. இந்த சிம்பிள் வழிகள் மூலம் பணத்த திரும்பப் பெறலாம் ▶நீங்க பணம் அனுப்புன நபரை தொடர்புகொண்டு பணத்த திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க ▶அந்நபர் மறுக்கும் பட்சத்தில் உங்களோட வங்கியில நீங்க முறையிடலாம் ▶புகார் கொடுத்தும் வேலை நடக்கலன்னா, NPCI-யோட இலவச எண் 1800-120-1740-க்கு அழைத்து புகாரளியுங்க. SHARE IT.

News August 24, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை

image

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.

error: Content is protected !!