News May 6, 2024

தோனி விளையாடாமலேயே இருக்கலாம்: ஹர்பஜன்

image

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும் அவரது ஓய்வு குறித்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் தோனியை விமர்சித்திருக்கிறார். “தோனி 9ஆவது வீரராக களமிறங்கப் போகிறார் என்றால் அவருக்குப் பதில் பவுலர் ஒருவரை அணியில் எடுக்கலாம். முன் வரிசையில் களமிறங்க முடியாது என்றால் விளையாடாமலே இருக்கலாம்” என்று அவர் கூறியது பேசுபொருள் ஆகியிருக்கிறது.

Similar News

News March 25, 2026

அணு ஆயுதம்.. என் முடிவே சரி: கிம் ஜாங் உன்

image

ஈரான் மீதான USA தாக்குதல், வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருப்பது சரிதான் என்பதை நிரூபிக்கிறது என கிம் ஜாங் உன் கூறியுள்ளார். 2019-ல் டிரம்ப்புடன் நடந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்ட அவர், USA-ன் அழுத்தத்தையும், இனிமையான பேச்சையும் நிராகரித்தது சரியே எனவும் பேசியுள்ளார். மேலும், அணு ஆயுத பலம் இல்லாத நாடுகள் USA-க்கு இலக்காக மாறும் என்ற அவருடைய நம்பிக்கை உறுதியாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

News March 25, 2026

RCB-ன் பெயர் மாறுகிறதா?

image

உரிமம் மாறியுள்ள நிலையில், RCB அணியின் பெயர் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Royal Challengers என்பது விஜய் மல்லையாவின் பிராண்டின் பெயர் என்பதால், தற்போது உரிமைத்தை வாங்கியுள்ள ஆதித்யா பிர்லா நிறுவனம் அந்த பெயரை மாற்றலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், RCB என்பது வெறும் அணியின் பெயரல்ல, அது ரசிகர்களின் எமோஷன் எனவும் பெயரை மாற்ற வேண்டாம் என்றும் RCB ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

News March 25, 2026

FLASH: அமமுக களம் காணும் தொகுதிகள் இவைதான்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுக்கு 11 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருந்தது. அவை எந்தெந்த தொகுதிகள் என்பதை EPS இன்று அறிவித்துள்ளார். அவை: ➤பெரியகுளம் ➤மன்னார்குடி ➤திருவையாறு ➤திருப்பத்தூர்(வேலூரில் இருந்து பிரிந்த மாவட்டம்) ➤நாங்குநேரி ➤திருச்சிராப்பள்ளி மேற்கு ➤சைதாப்பேட்டை ➤பூவிருந்தவல்லி ➤ஒட்டப்பிடாரம் ➤காரைக்குடி ➤மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளில் அமமுக களம் காணவுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!