News January 19, 2026
திருச்சி: பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

திருச்சி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <
Similar News
News February 3, 2026
திருச்சி: 8-ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மஞ்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நிஷாந்த் ஆண்டணி (13) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, நிஷாந்த் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 2, 2026
திருச்சியில் குவிந்த 663 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொகுப்பு வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 663 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
News February 2, 2026
திருச்சி: மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

எடமலைப்பட்டி புதூர் ஜே.ஜே நகர் பகுதியைச்சேர்ந்த கோபால் என்பவர் குடும்ப பிரச்சனையில், தனது மனைவியை தாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கோபால் மீது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி விஷ்ணு பிரியா உத்தரவிட்டார்.


