News January 19, 2026

புதுவை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

Similar News

News February 10, 2026

புதுச்சேரி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 10, 2026

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

image

புதுச்சேரி தொழிலாளர் நலத் துறையின் சமூகப் பாதுகாப்பு வாரிய தொழிலாளர் அதிகாரி வெளியிட்ட செய்தியில், “அமைப்பு சாரா தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை எல்ஐசி மூலம், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. பொது சேவை மையத்தைப் பயன்படுத்தி இதில் சேரலாம்.” என கூறியுள்ளார்.

News February 10, 2026

அதிக வருகைப் பதிவு வைத்துள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை

image

பள்ளி கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும், 97 சதவீதத்திற்கும் மேல் வருகைப் பதிவு பெற்றிருக்கும் மாணவர்கள் அரசின் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.1.92 லட்சம் நிதிக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் 957 மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.” என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!