News January 19, 2026

கழிவறையில் பெண் போலீஸை வீடியோ எடுத்த SI சிக்கினார்

image

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் காவலர்களின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த SI கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நேற்று முன்தினம் CM ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக சென்ற பெண் காவலர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட பரமக்குடி SI முத்துப்பாண்டி, தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காக்க வேண்டிய போலீஸே இப்படியா?

Similar News

News February 16, 2026

பிப்.21-ல் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

image

வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன் தாக்கத்தால், பிப்.20 மற்றும் 21-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பிப்.21-ம் தேதி மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர்,புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்.

News February 16, 2026

இந்தியாவுக்கு எதிரான தோல்வியால் அக்தர் ஆத்திரம்!

image

திறமையற்ற ஒருவருக்கு பெரிய வேலையைக் கொடுத்தால், அவர் நாட்டையே அழித்துவிடுவார் என பாக்., கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வியை Ex வீரர் சோயிப் அக்தர் சாடியுள்ளார். இந்தியாவுடனான பாக்., தோல்விக்கு காரணமாக நக்வியை குறிப்பிடும் அக்தர், தனது பதவியின் முக்கியத்துவமே தெரியாதபோது, அவர் எப்படி அணியை வழிநடத்துவார் என்றும், தகுதியற்றவர்களிடம் பொறுப்பு சென்றால் விளைவு தோல்விதான் எனவும் விமர்சித்துள்ளார்.

News February 16, 2026

அரசியல் நிலைப்பாட்டை சொன்ன நடிகை த்ரிஷா!

image

தான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதும் இல்லை என நடிகை த்ரிஷா தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார். விஜய்யை, த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி நயினார் நாகேந்திரன் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. அதற்கு <<19157392>>பதிலடி கொடுத்துள்ள அவர்<<>>, உயர் பதவியில் இருப்போர் பொது இடங்களில் சமநிலையுடன் இருப்பது அவசியம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!