News January 19, 2026
எதிர்ப்பையும் மீறி CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

திருப்போரூரில் ₹342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாமல்லன் நீர்தேக்கத்திற்கு CM அடிக்கல் நாட்டினார். சுமார் 4,376 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையில் இது அமைய உள்ளது. இந்த நீர்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும் என்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், CM இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
Similar News
News February 12, 2026
ராசி பலன்கள் (12.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 12, 2026
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: CPI

ஜனநாயகத்திற்கு பேராபத்தான பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற தங்களது இலக்குக்காகவே திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளோம் என CPI வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பது தங்கள் கொள்கை முடிவல்ல; அதேசமயம் இரட்டை இலக்க சீட்களை கேட்டு பெறுவோம் என்றும், கட்சிகளுக்கு இடையேயான மாற்று கருத்துகள் கொள்கை பலம் கொண்ட திமுக கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது!

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் <<19094222>>www.tnpsc.gov.in www.tnpscexams.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவுத் தளத்தின் மூலம் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


