News January 19, 2026
BIG NEWS: விஜய் மீது CBI வழக்கு.. டெல்லியில் பரபரப்பு

கரூரில் 41 பேர் பலியான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரை சேர்க்க CBI திட்டமிட்டுள்ளதாம். 2 நாள்கள் விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இந்த முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் காவல் நிலைய FIR-ல் புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோர் பெயர்கள் உள்ளன.
Similar News
News February 9, 2026
விஜய் போட்டியிடும் 2 தொகுதிகள் இதுதான்?

2026 தேர்தலில் 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தனது முதல் மக்கள் சந்திப்பை திருச்சியில் இருந்துதான் தொடங்கினார். அப்போதே திருச்சியை குறிவைத்துதான் அவர், பரப்புரையை தொடங்குகிறார் என பேச்சு எழுந்தது. இந்நிலையில், சென்னை மண்டலத்தில் விருகம்பாக்கம் தொகுதியிலும், மத்திய மண்டலத்தில் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம்.
News February 9, 2026
திமுக கூட்டணியில் குழப்பம்: டிடிவி

அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ‘ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸின் டிமாண்டை சுட்டிக்காட்டி திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது; ஆனால், அதிமுக கூட்டணி தெளிவாக இருக்கிறது எனக் கூறிய அவர், 2026 தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
News February 9, 2026
உயிரை காக்கும் ஊழியர்கள் பழிவாங்க படுகிறார்களா?

EMRI GHS நிர்வாகத்தில் பணியாற்றும் அவசர ஊர்தி (108) பணியாளர்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சேவைப் பணியில் பல ஆண்டுகளாக ஊழியர்கள் பழி வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பலரின் உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தங்களின் வாழ்க்கையே மோசமாக இருப்பதாகவும் வேதனை தெரிக்கின்றனர்.


