News January 19, 2026

கண்கள் அடிக்கடி அரிக்கிறதா? இத கவனிங்க!

image

காலநிலை மாற்றம், தொற்று கிருமிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் அரிப்பு, எரிச்சலை தடுக்க சில இயற்கை டிப்ஸ்: *ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து கண்கள் மீது ஒத்தடம் கொடுக்கலாம். *பாலை துணியில் நனைத்து கண்களை துடைத்து வரலாம் *வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மீது வைக்கலாம் *வெந்நீரில் உப்பு கலந்து, துணியில் நனைத்து கண்கள் மீது வைக்கலாம் *தொற்று அதிகம் இருந்தால் டாக்டரை அணுகுங்கள்.

Similar News

News February 2, 2026

தனுஷ் படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்

image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ‘D55’ படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளன. 2 நாள்களுக்கு முன், தனுஷ் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், இன்று சாய் பல்லவியும் நடிப்பதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர், 2 முன்னணி நடிகைகள் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

News February 2, 2026

கல்வியை வியாபாரமாக்கிய திமுக அரசு: அண்ணாமலை

image

திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் பணம் சம்பாதிக்க, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை சிதைத்ததே, இதற்கு முக்கிய காரணம்; ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி நடுத்தர குடும்பத்தினர் மீது திமுக அரசு கடன் சுமையை திணித்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

News February 2, 2026

நாட்டுக்கோழி Vs பிராய்லர் முட்டை: குழந்தைக்கு எது Best?

image

பொதுவாக பிராய்லர் முட்டையை விட நாட்டுக்கோழி முட்டைதான் நல்லது என்ற ஒரு பார்வை இருக்கிறது. ஆனால், 2 முட்டைகளுமே சரிசமமான சத்துக்களை கொண்டவைதான். புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3 என அனைத்தும் சமமாகவே இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். 2 கோழிகளும் வளர்க்கப்படும் சூழலை வைத்தே வெள்ளை முட்டை பற்றிய தவறான புரிதல் உருவாகியிருக்கிறது. எனவே 1+ வயது குழந்தைக்கு எந்த முட்டையை வேண்டுமானாலும் கொடுக்கலாம். SHARE.

error: Content is protected !!