News January 19, 2026
விழுப்புரத்தில் குவிந்த பொதுமக்கள்!

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு குவிந்த மக்களால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் நெரிசல் மிகுந்து காணப்பட்டன.தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை, கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, மாவட்டங்களில் இருந்து சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் விடுமுறை முடிந்து திரும்பிச் செல்லத் தொடங்கினா்.
Similar News
News January 30, 2026
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (ஜன.30) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர் சுரேஷ் உட்பட பலர் உள்ளனர்.
News January 30, 2026
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், “போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், “போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஆட்டோவில் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
News January 30, 2026
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

(ஜன.30) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உதவி ஆணையர் ராஜி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.


