News May 6, 2024
கள்ளக்குறிச்சி : 2 பள்ளிகள் 100% தேர்ச்சி

தமிழகம் முழுவதும் நடைபெற்ற முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சியும் முதல் மதிப்பெண் 540 எனவும், ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் 100% தேர்ச்சி சதவீதம் எனவும், முதல் மதிப்பெண் 535 எனவும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News July 7, 2025
திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொணலவாடி கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில், சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு வந்து பச்சையம்மனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஷேர் பண்ணுங்க…
News July 7, 2025
10th முடித்தால் போதும் கடற்படையில் வேலை

இந்திய கடற்படையில் உள்ள குரூப்.பி மற்றும் குரூப்-சி பிரிவில் உள்ள சார்ஜ்மேன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18 முதல் 45 வரை இருக்கலாம். 10th முதல் பொறியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 18,000- 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் <
News July 7, 2025
சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்ப படிவத்துடன், அதற்குரிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களையும் இணைத்து, வரும் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்ப படிவத்தினை https://tinyurl.com/Panchayataward என்ற இணையளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த செய்தியை ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க