News January 19, 2026

ரயில்வே வேலை, ₹35,000 சம்பளம்: APPLY NOW!

image

இந்திய ரயில்வே துறையில் 312 Isolated Category பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: ₹19,900 – ₹35,400 வரை. வயது வரம்பு: 18 – 35. தேர்வு செய்யும் முறை: Computer Based Test (CBT), Performance Test/ Skill Test/ Translation Test, Medical Test, Certificate Verification. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.01.2026. முழு விவரங்களை அறிய (அ) விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

Similar News

News February 5, 2026

அஜித்குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

image

தனது மகன் குற்றவாளி இல்லை என்று கோர்ட்டே கூறிவிட்டதாக அவரது தாயார் மாலதி தெரிவித்துள்ளார். காவலாளி அஜித்குமாரின் மரணம் ‘Custodial death’ என CBI தரப்பு மதுரை HC-ல் கூறியிருந்தது. அத்துடன், போலீஸார் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிபதியும் காட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், யார் சொல்லி தனது மகனை கொன்றார்கள் என கேட்டுள்ள தாயார், நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News February 5, 2026

எப்ஸ்டீன் சர்ச்சை.. மன்னிப்பு கோரினார் பில் கேட்ஸ்

image

எப்ஸ்டீனுடன் செலவழித்த ஒவ்வொரு கணத்திற்காகவும் வருந்துகிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பில் கேட்ஸ் கூறியுள்ளார். முன்னதாக எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும் என அவரது <<19051133>>Ex.மனைவி<<>> கூறியிருந்தார். இந்நிலையில், சிறுமிகள் குறித்து கசிந்த மின்னஞ்சல்களில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

News February 5, 2026

பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்குறீங்களா? உஷார்

image

USA-வில் கர்ப்பிணி ஒருவர் பாலை சுட வைக்காமல் அப்படியே குடித்துள்ளார். இதனால், பாலில் இருந்த பாக்டீரியாவால் லிஸ்டீரியா என்ற தொற்று ஏற்பட, தொற்றுடன் பிறந்த அவரது குழந்தை சில மணிநேரங்களில் இறந்துள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் காய்ச்சாத பாலை குடித்தால் நோய்வாய்ப்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சில சமயங்களில் இது போன்ற தொற்று நோய் ஏற்பட்டு, கருச்சிதைவும் ஏற்படலாம் என்கிறார்கள்.

error: Content is protected !!