News January 19, 2026
மயிலாடுதுறை: மருந்தை தின்று ஆடுகள் பலி

கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணி இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமான 9 ஆடுகளை அருகில் உள்ள வயலில் நேற்று மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். அப்போது ஆடுகள் அந்த இடத்திலேயே இறந்து கிடந்துள்ளன. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பன்றிகளை கொல்வதற்காக வைத்த குருணை மருந்தை ஆடுகள் தின்றதால் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News February 3, 2026
மயிலாடுதுறை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘F<
News February 3, 2026
மயிலாடுதுறை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் <
News February 3, 2026
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் II, II a பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு வரும் பிப்.8-ம் தேதி மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அதில் மாவட்டத்தை சேர்ந்த 86 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 2 மணிக்குள்ளாகவும் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும், எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களும் எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


