News January 19, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News February 22, 2026
7-ம் வகுப்பு மாணவி ரேப்.. 4 டீச்சர்கள் செய்த கொடூரம்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பள்ளி மாணவியை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஒடிசாவை அதிர வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவி, தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் 4 ஆசிரியர்கள் மற்றும் பியூன் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. இத்தகைய கொடூரர்களை என்ன செய்வது?
News February 22, 2026
KH×RK ரீ-யூனியன்.. ஷூட்டிங் போட்டோஸ் வைரல்

நேற்று வெளியான KH×RK ரீ-யூனியன் படத்தின் புரொமோ யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது. புரொமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சிலர் அதில் AI பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சிக்கின்றனர். இதனிடையே ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் SM-ல் வைரலாகியுள்ளன. இங்கு பகிரப்பட்டுள்ள போட்டோக்களில் சில AI படங்களும் உள்ளன. அவற்றை சரியாக கண்டுபிடித்து கமெண்ட் செய்யவும்.
News February 22, 2026
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தது ALERT

PM KISAN திட்ட பயனாளிகள் அடுத்த தவணையை (₹2,000) பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. நீங்கள் KYC அப்டேட் செய்திருந்தாலும், வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தாலோ, NPCI மேப்பிங் புதுப்பிக்கப்படாவிட்டாலோ பணம் வராமல் போகலாம். ஹோலி பண்டிகைக்கு முன்பாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், பணிகளை உடனே முடியுங்கள். SHARE IT.


