News January 19, 2026
ஆ.ராசாவுக்கு எதிராக விசிக.. சிக்கலில் கூட்டணி

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவனை ‘சாதிக் கட்சி தலைவர்’ என ஆ.ராசா பேசியது கூட்டணிக்குள் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் விசிகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, ‘RSS கைக்கூலி ஆண்டிமுத்து ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும், 2ஜி ஊழல்வாதி ஆண்டிமுத்து ராசாவை கண்டிக்கிறோம்’ என அவர்கள் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 26, 2026
தஞ்சை கலெக்டர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம், 2026 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கான கால அளவை ஜனவரி 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், இந்த கால நீட்டிப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
News January 26, 2026
பாஜக குறித்து விஜய் பேசாதது ஏன்? அருண்ராஜ் பதில்

தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், பாஜகவின் பெயரையே பயன்படுத்தவில்லையே என்ற கேள்விக்கு அருண்ராஜ் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு தேர்தல் களத்தில் இருக்கும் கட்சியை குறித்து மட்டுமே விஜய் பேசியதாக அவர் விளக்கமளித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை எனவும், இந்த தேர்தலில் திமுக – தவெக இடையே மட்டுமே போட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 26, 2026
உலகின் மிக பழமையான கொடி எது தெரியுமா?

தேசியக்கொடி என்பது அடையாளம் மட்டுமின்றி, மக்களுடன் இரண்டற கலந்த எமோஷனாகும். காலத்திற்கு ஏற்றார் போல பல நாட்டின் கொடிகள் மாறினாலும், 1625-ல் இருந்து ஒரு நாடு இப்போது வரை ஒரே கொடியை பயன்படுத்தி வருகிறது. நாம் பயன்படுத்தும் இந்தியாவின் தேசியகொடி 1947-ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி என்றால் உலகின் பழமையான கொடி என்பதை அறிய மேலே உள்ள படத்தை இடது பக்கமாக Swipe பண்ணுங்க.


