News January 18, 2026
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க TIME OUT

தமிழகத்தில் நடைபெற்ற SIR பணிகளின் அடிப்படையில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 13.3 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து வாக்காளர்கள் அளிக்கும் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நடிகர் கைது

மும்பையின் ஓஷிவாராவில் உள்ள குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு முன் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வந்த போலீசார், இதில் கமால் கானுக்கு தொடர்பு இருப்பதாக அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் அவரை கைது செய்தனர்.
News January 24, 2026
கூட்டணி முடிவு: சஸ்பென்ஸ் வைத்த கிருஷ்ணசாமி

பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்துள்ள நிலையில், புதிய தமிழகம் இதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில் புதிய தமிழகம் இல்லாமல் தென் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது எனத் தெரிவித்தார். மேலும், கொள்கை ரீதியாக இம்முறை தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். அடுத்த, ஒருவாரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் கூறினார்.