News January 18, 2026
PM மோடியை வழிநடத்தும் தர்மம் : மோகன் பகவத்

தர்மத்தின் மூலமாகவே உலகின் விஸ்வகுருவாக இந்தியாவால் உருவெடுக்க முடியும் என மோகன் பகவத் கூறியுள்ளார். தர்மம் என்ற வாகனத்தில் பயணித்தால் யாருக்கும் விபத்து ஏற்படாது என்றும், அதே ஆற்றல் தான் தன்னை, PM மோடி மற்றும் பொதுமக்களை வழிநடத்துவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு நாடு மதச்சார்பின்மையாக இருக்கலாம், ஆனால் தர்மத்தை பின்பற்றாமல் வாழ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
கல்லூரி மாணவிகளின் ஆபாச படங்கள்.. சிக்கினார்!

AI பல நன்மைகளை தந்தாலும், சிலர் தீய செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். கோவையில் கல்லூரியில் படிக்கும் 24 மாணவிகளின் ஆபாச போட்டோக்கள் SM-ல் பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் களத்தில் குதித்த போலீசார், அதே கல்லூரியை சேர்ந்த 3-ம் ஆண்டு மாணவனை அதிரடியாக கைது செய்துள்ளனர். தனது காதலி மூலம் மாணவிகளின் போட்டோக்களை பெற்று இந்த கொடூரத்தை அந்த மாணவன் செய்துள்ளான். பெண்களே உஷார்.
News February 9, 2026
திமுக + பெண்கள் = தவெக.. நிர்மலா போடும் கணக்கு

2026 தேர்தலில் விஜய் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் யார் வாக்குகளை பிரிக்கப் போகிறார் என்பதே கேள்வியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். NDTV-க்கு அளித்த பேட்டியில் பேசிய நிர்மலா, திமுக & பெண்கள் வாக்குகளை விஜய் தன் பக்கம் இழுக்கப் போகிறாரா என்பதும் கேள்வியாகவே உள்ளது என்றும் தெரிவித்தார். உங்கள் கருத்து என்ன?
News February 9, 2026
BREAKING: நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடாளுமன்றத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிப்.13-ம் தேதி பிற்பகல் 1.11 மணிக்கு குண்டு வெடிக்கும் எனவும், ‘டெல்லி காலிஸ்தானாக மாறும்’ என்றும் அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், காவல்துறை, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள 10 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.


