News January 18, 2026

கிருஷ்ணகிரி: 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

image

தளி அடுத்த சரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி பல்லவி (14), இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர் வயிற்றுவலி, தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று மாலை ஜன-17 வீட்டில் தனியாக இருந்த பல்லவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தளி போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 3, 2026

ஓசூர் அருகே சோழர் கால கோயில் கண்டுபிடிப்பு

image

ஓசூர் அடுத்துள்ள பெகிலி என்ற ஊரில் மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையிலும், மரங்களால் சூழப்பட்ட நிலையிலும் சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிற்காலச் சோழர் கால கோயில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் இக்கோயிலை காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜெயலட்சுமி கண்டுபிடித்துள்ளார்.

News February 2, 2026

கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (02.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!