News January 18, 2026
குமரி: நண்பனை அரிவாளால் வெட்டியவர் கைது

கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் சுபின். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ராஜித் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் நண்பர்களான நிலையில் சுபினை, ராஜித் மது குடிக்க அழைத்துள்ளார். அங்கு சென்ற சுபினை, ராஜித் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து சுபின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து ராஜித்தை கைது செய்தனர்.
Similar News
News February 3, 2026
குமரி: FIR பெறுவதில் சிக்கலா.? SP புதிய தகவல்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், FIR உங்கள் உரிமை குறித்த போஸ்டர் அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் புகார்தாரருக்கு FIR நகலை இலவசமாக பெரும் உரிமை இருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 7708239100 என்ற பப்ளிக் ஃபீடுபேக் சென்டர் எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
News February 3, 2026
குமரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 3, 2026
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


