News January 18, 2026
மகளிருக்கு ₹2,500.. புதுச்சேரி CM தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ₹1,000 உதவித்தொகையை சமீபத்தில் ₹2,500 ஆக உயர்த்தி அரசு அறிவித்தது. இந்நிலையில், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தொகை விரிவாக்க திட்டத்தை CM ரங்கசாமி ஜன.22-ல் தொடங்கி வைக்கிறார். நேற்று, அனைத்து மகளிருக்கும் ₹2,000 வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 12, 2026
ராசி பலன்கள் (12.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 12, 2026
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: CPI

ஜனநாயகத்திற்கு பேராபத்தான பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற தங்களது இலக்குக்காகவே திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளோம் என CPI வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்பது தங்கள் கொள்கை முடிவல்ல; அதேசமயம் இரட்டை இலக்க சீட்களை கேட்டு பெறுவோம் என்றும், கட்சிகளுக்கு இடையேயான மாற்று கருத்துகள் கொள்கை பலம் கொண்ட திமுக கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது!

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் <<19094222>>www.tnpsc.gov.in www.tnpscexams.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவுத் தளத்தின் மூலம் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


