News January 18, 2026

தமிழகத்தில் தரமான பேராசிரியர்கள் இல்லை: ரவி

image

பள்ளிகல்வி, உயர்கல்வி, பிஎச்டி ஆகிய நிலைகளில் தரமான கல்வியை உறுதிசெய்ய வேண்டும் என கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மேலும், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பல பேராசிரியர்கள் தகுதிவாய்ந்தவர்களாக இல்லை என்றும், அதனால் தரமான பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் உயர்கல்வி சேரும் மாணவர்கள் விகிதத்தில் TN தான் முதலிடத்தில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 7, 2026

விஜய் பக்கம் சாய்கிறார்களா? நாதக இன்று ஆலோசனை

image

234 தொகுதிகளிலும் நாதக சார்பில் போட்டியிட தேர்வாகியுள்ள வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் பிரசார திட்டங்கள், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், அடிப்படை தேவைகளின் அவசியம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைக்க சீமான் அறிவுறுத்தவுள்ளாராம். அதேநேரம், விஜய்யின் பக்கம் நாதக இளைஞர் படை சென்றுவிடாமல் இருக்க முக்கிய வியூகத்தையும் கூற சீமான் கூறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News February 7, 2026

BREAKING: சிக்கன் விலை மளமளவென குறைந்தது

image

சனிக்கிழமை வந்தாச்சு, சிக்கன் எடுக்க நினைப்பவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் தான் இது. நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை இன்று ₹5 குறைந்து ₹115-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டை கோழி விலையும் ₹2 குறைந்து ₹70-க்கு விற்பனையாகிறது. மேலும், முட்டை கொள்முதல் விலை ₹5.25 ஆகவே நீடிக்கிறது. இதனால் சிக்கன் கடைகளில் கிலோ ₹20 – ₹30 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊரில் எவ்வளவு?

News February 7, 2026

வெளிச்சத்திற்கு வந்த பாக்., வெடிகுண்டு விவகாரம்!

image

இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் நேற்று நடந்த மனித <<19067497>>வெடிகுண்டு தாக்குதலில்<<>> 31 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். 196 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். இந்த தாக்குதலை இந்தியாதான் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியிருந்தது. அதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் மூலம் பாக்., அரசின் குற்றச்சாட்டு பொய்யாகியுள்ளது.

error: Content is protected !!