News May 6, 2024

ஈரோடு : 97.42 சதவீத தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.42 ஆகும். இதில் 9,864 மாணவர்கள், 11,362 மாணவிகள் என மொத்தம் 21,226 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,540 மாணவர்கள், 11,138 மாணவிகள் என மொத்தம் 20,678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த மாணவர்கள் 96.72%, மாணவிகள் 98.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

Similar News

News July 5, 2025

ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் எப்போது?

image

ஈரோடு மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2024-25ம் ஆண்டுக்கான செயல்பாடுகளின் செலவினங்கள் மீதான சமூக தணிக்கை மேற்கொள்ள சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறும். இடம் நேரம் ஆகியவை குறித்து தொடர்புடைய கிராம ஊராட்சி மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். முறையாக கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க வட்டார அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News July 5, 2025

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு

image

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில் நுட்ப உதவியாளர், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 10,12 மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட இணைய தள முகவரி <>erode.nic.inல்<<>> உரிய படிவம், தகுதி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.12,000 முதல் 20,000 ரூபாய் வரை வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News July 5, 2025

எச்சரிக்கை! ஆன்லைன் நட்பால் ஆபத்து

image

கரூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (30); இவர் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக உள்ளார். இவர் மொபைல் செயலி மூலம் ஒருவரிடம் பேசியதில்,பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.இதை நம்பி நேற்று முன்தினம் சென்ற ஜெகதீசனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி 30 ஆயிரம் ரூபாய், பைக்கை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் விசாரணை.

error: Content is protected !!