News January 18, 2026
விழுப்புரம்: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் தாட்கோ <
Similar News
News January 31, 2026
விழுப்புரம்: அடுத்தடுத்த அரங்கேறிய சம்பவங்கள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. ஜூஸ் கடை உரிமையாளர் சக்கரபாணி வீட்டில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 3.5 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடினர். அதேபோல், தனியார் பள்ளி ஆசிரியை அபர்ணா வீட்டில் 2.5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரே நாளில் நடந்த இந்தத் துணிகரத் திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 31, 2026
விழுப்புரத்தில் பரிதாப பலி!

பாடிபள்ளம் பகுதியை சேர்ந்த ர.முருகன் (50). கூலித் தொழிலாளியான இவா், வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய பாலத்தின் மேல்பகுதியில் கடந்த 17-ஆம் தேதி இரவு படுத்திருந்தார். அப்போது திடீரென 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தாா்.இதில் காயமடைந்த முருகனை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DSP சரவணன் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். அவசர உதவிக்கு 100 அல்லது குறிப்பிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.


