News January 18, 2026
தவெகவுடன் யார் யார் கூட்டணி.. செங்கோட்டையன் அறிவிப்பு

தவெகவுடன் யார் யார் கைகோர்க்கிறார்கள் என்பது வரும் 23-ம் தேதி தெரிந்துவிடும் என செங்கோட்டையன் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். ஆட்சியில் பங்கு எனக் கூறி கூட்டணி கதவைத் திறந்து வைத்துள்ள போதிலும், விஜய் உடன் இதுவரை ஒரு கட்சி கூட கூட்டணி வைக்கவில்லை. இதனிடையே, வரும் 23-ம் தேதி NDA கூட்டணி, PM மோடி முன்னிலையில் முழு வடிவம் பெறவுள்ளது. அதை மனதில் வைத்தே செங்கோட்டையன் இதைத் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
இரவில் அந்த மாதிரி கனவு வருதா..!

நம்மில் பலருக்கும் இரவில் பேய் துரத்துவது போன்றோ, பேய் நம்மை அமுக்குவது போலவோ கனவுகள் வந்திருக்கும். கனவு சாஸ்திரப்படி, கடந்த காலத்தில் செய்த ஏதேனும் ஒரு செயலுக்காக நீங்கள் வருந்திக் கொண்டிருந்தால் பேய் கனவுகள் வருமாம். கடந்த கால நினைவுகளை மறப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையே பேய் கனவுகள் உணர்த்துகின்றன. அதனால், அந்த மாதிரி கனவுகளுக்கு பயப்பட வேண்டாம். SHARE IT.
News February 10, 2026
எய்ம்ஸ் தாமதத்திற்கு திமுகவே காரணம்: அண்ணாமலை

மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடல் கட்டுமான பணிகளுக்கு திமுக அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனையோ முறை மதுரை சென்ற CM, எய்ம்ஸ் கட்டுமான பணிகளை பார்த்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அங்கிருந்த மரங்களை வெட்டுவதற்கு கூட TN அரசு அனுமதி தரவில்லை என்றும், மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு திமுக அரசு தான் காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.
News February 10, 2026
கார்களின் விலை மளமளவென குறைந்தது!

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், ஹோண்டா தனது வெவ்வேறு மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹1.97 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் கார்களுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


