News January 18, 2026
மணிப்பூர் துயரம்: நீதி கிடைக்காமலேயே பிரிந்த உயிர்

மே 2023-ல் மணிப்பூர் கலவரத்தில் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 20 வயது குக்கி பழங்குடியின பெண், ஆறாத ரணங்களுடன் போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பயங்கர சம்பவம் தந்த மன உளைச்சலும், உடல்நல பாதிப்புமே அவரது மரணத்திற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில், தனது மகள் உயிருடன் இருந்தவரைக்கும் அவளுக்கு நீதி கிடைக்கவில்லை என பெற்றோர் கதறுவது நெஞ்சை உலுக்குகிறது.
Similar News
News January 30, 2026
தைரியம் இருந்தால் புடின் உக்ரைன் வரலாம்: ஜெலன்ஸ்கி

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மாஸ்கோவிற்கு அழைத்திருந்தது. இதனை மறுத்துள்ள ஜெலன்ஸ்கி, துணிச்சல் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த புடின் உக்ரைனுக்கு வரலாம் என சவால் விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே, நாங்களும் நிறுத்துவோம் எனவும் போரை முடிவுக்கு கொண்டு வரவே தாங்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
News January 30, 2026
BREAKING: தங்கம் விலை மேலும் குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்துள்ளது. இன்று மதிய நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹350 குறைந்து ₹15,850-க்கும், சவரனுக்கு ₹2,800 குறைந்து ₹1,26,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹7,600 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
News January 30, 2026
நான் கொச்சைப்படுத்தவில்லை: மா.சு விளக்கம்

தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் கோரி போராடுவது ‘பேஷன்’ ஆகிவிட்டது என அமைச்சர் மா.சு., கூறியதற்கு <<19000579>>அண்ணாமலை <<>>கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், போராட்டங்களை ஒருபோதும் கொச்சைப்படுத்தவில்லை என மா.சு விளக்கமளித்துள்ளார். போராட்டம் என்பது இயல்பாக நடக்க வேண்டும்; சிலர் தூண்டுதலால் நடக்க கூடாது; தேர்தல் நேரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.


