News May 6, 2024

மே 9 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், துணைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 23, 2025

ராணிப்பேட்டை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 23, 2025

தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

image

சில்லென்று காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவுக்கு இன்று பிறந்தநாள். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்தியா சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? வாழ்த்தை Likes-ஆக கொடுங்க.

News September 23, 2025

AI-ஆல் பெண்களுக்கு தான் அதிக பாதிப்பா!

image

AI-ஆல் ஆண்களை விட பெண்கள் வேலையிழக்கும் அபாயம் அதிகம் என ஐநா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் பெண்களின் 28% வேலைகளும், ஆண்களின் 21% வேலைகளும் AI-ஆல் செய்யமுடியும். இதற்கு, இத்துறையில் பெண்கள் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030-க்குள் 34.3 கோடி பெண்கள் பாதிக்கப்படலாம். எனவே, இந்த பாலின பாகுபாடை உடனடியாக சரி செய்ய ஐநா வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!