News January 18, 2026
புதுச்சேரி: மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை

புதுவை நெல்லித்தோப்பை சேர்ந்தவர் பசுபதி(31). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி ரம்யா, பசுபதியை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த படுபதி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 27, 2026
புதுச்சேரியில் பிறந்த சினிமா பிரபலங்கள்?

புதுச்சேரி தனது வளமான கலாச்சாரம் மற்றும் கலைப் பாரம்பரியத்திற்காகப் பெயர் பெற்றது. இந்த அழகிய நகரம், இந்தியத் திரையுலகிற்குப் பல திறமையான கலைஞர்களை அளித்துள்ளது. அதில் உள்ள முக்கிய பரபலங்கள் சிலர் யார் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
1. ஆனந்தராஜ்
2. KPY பாலா
3. தாவோ போர்ச்சன்
4. குணநிதி
இத்தகவலை SHARE செய்துவிட்டு, உங்களுக்கு தெரிந்த நடிகர்களை கமெண்ட் செய்யுங்கள்!
News January 27, 2026
புதுவை: கேஸ் மானியம் வரவில்லையா? இத TRY பண்ணுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா? உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.
News January 27, 2026
புதுவை: பொது இடத்தில் ரகளை – 2 பேர் கைது

நிரவி பழைய பள்ளிவாசல் முன்பு 2 பேர் நின்றுகொண்டு அவ்வழியாக செல்வோரை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவ்வழியாக சென்ற நிரவி போலீசார் அவர்களை எச்சரித்தும், அங்கிருந்து செல்லாததால், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் நிரவி பள்ளிவாசல் தெரு அப்துல் ரகுமான், மேலராஜா தெரு முகமது அன்வர் ஷாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


