News January 18, 2026
BREAKING: சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல் மொத்த சந்தையில் கறிக்கோழி விலை இன்று கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை இல்லாத வகையில் 1 கிலோ ₹152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோழி 1 கிலோ ₹82-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் முட்டை 30 காசுகள் குறைந்து ₹5.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் விலை உயர்வால் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ சிக்கன் ₹240 – ₹300 வரை விற்பனையாகிறது. உங்கள் ஊரில் எவ்வளவு?
Similar News
News January 30, 2026
திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நிலை, நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நாளை(ஜன.30) முழு வேலை நாளாக செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கடந்த டிச.4ஆம் தேதி மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்ததால், அதனை ஈடு செய்யும் பொருட்டு நாளை பள்ளி முழு வேலை நாளாக செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)
News January 30, 2026
BREAKING: வழக்கு தொடர்ந்தார் விஜய்

ரோடு ஷோ தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற விஜய்யின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, தவெக தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் பாரபட்சம் இருப்பதாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
News January 30, 2026
துணை முதல்வர் காலமானார்.. அதிர்ச்சி தகவல்

<<18991180>>மகாராஷ்டிரா DCM அஜித் பவார்<<>> சென்ற விமானம் விபத்துக்குள்ளானதற்கு, விமானியின் மோசமான கணிப்பு காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர், விமானம் தரையிறங்கியபோது மோசமான வானிலை இருந்த நிலையில், விமானி செய்த தவறான கணிப்பால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனினும், விரிவான விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும்.


