News January 18, 2026

₹900 கோடியை நெருங்கும் மது விற்பனை

image

பொங்கல் திருநாளையொட்டி 2 நாள்களில் (ஜன. 14,15) மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியானது. 4 நாள் கொண்டாட்ட முடிவில் விற்பனை ₹900 கோடியை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பொங்கலுக்கு 4 நாள்களில் ₹725 கோடிக்கு விற்பனையானது. இந்தாண்டு மது விற்பனை விவரம் வெளியான நிலையில், பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Similar News

News February 14, 2026

இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்.. ஆச்சரியம்

image

இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு ஷியாம் பாபு உயிருடன் வீடு திரும்பி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போ, தகனம் செய்த உடல் யாருடையது?

News February 14, 2026

ஆதாரின் வடிவம் மாறப் போகிறது

image

ஆதார் கார்டு விரைவில் புதிய வடிவத்துக்கு மாறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர், முகவரி, ஆதார் எண் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் கார்டில் இருந்து நீக்கப்பட்டு, போட்டோ & QR கோட் மட்டுமே இடம்பெறும். இதனால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பது தடுக்கப்படும். QR கோடை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த விவரங்கள் தெரியும். இதனால், இதை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என UIDAI கருதுகிறது.

News February 14, 2026

விஜய் மீது Personal Attack.. அன்று அண்ணாமலை, இன்று நயினார்

image

விஜய்-த்ரிஷாவை சேர்த்துவைத்து நயினார் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் அனலாய் கொதிக்கிறது. இதேபோல் கடந்த மார்ச் மாதத்தில், விஜய் நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்கிறார் என அண்ணாமலை விமர்சித்திருந்தார். அப்போது அவரும் TN பாஜக தலைவராகத்தான் இருந்தார். இந்நிலையில் அந்த பழைய பேட்டியை பகிர்ந்து, விஜய் மீது பாஜக தலைவர்கள் தொடர்ந்து பர்சனல் அட்டாக் செய்துவருவதாக அவரது ரசிகர்கள் கொதிக்கின்றனர்.

error: Content is protected !!