News January 18, 2026
ஓபிஎஸ், சசிகலாவை விமர்சித்த புகழேந்தி

முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஏன் EPS-யிடம் தைரியமான கேள்வி கேட்காமல் ஒதுங்கி செல்கின்றனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஓசூரில் பேசிய அவர், தனது நிலைப்பாடு குறித்து 10 நாட்களில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும், அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை கொண்டாடுவோம் என்று கூறினார்.
Similar News
News January 29, 2026
TET தேர்வர்களுக்கு குட் நியூஸ்

டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. BC, BC-Muslim, MBC, DNC, மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு 55% ஆக இருந்த டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை 50% ஆக குறைத்து அரசு அறிவித்துள்ளது. மேலும், SC, ST வகுப்பினருக்கு 40% ஆகவும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு, நவம்பரில் நடந்த டெட் தேர்வுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 29, 2026
வீட்டுப் பத்திரம் தொலைந்து விட்டதா?

அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் பதற வேண்டாம். நகலை பெற முதலில் FIR பதிவு செய்ய வேண்டும்*ஆங்கிலம், பிராந்திய மொழி நாளிதழ்களில் விளம்பரம் கொடுங்கள் *பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் விபரங்கள், FIR நகல், செய்தித்தாள் விளம்பர நகலை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளிக்க வேண்டும் *நகல் பெறுவதற்கான கட்டணத்தை அலுவலகத்தில் Deposit செய்ய வேண்டும்.
News January 29, 2026
தைப்பூசம் விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

தைப்பூசம், வார விடுமுறை நாள்களையொட்டி, நாளை, நாளை மறுநாள், பிப்.1-ம் தேதி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து 1,205 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முருகன் கோயில்களுக்கு மக்கள் நெரிசலின்றி செல்ல ஏதுவாக கூடுதல் பஸ்களை தமிழக அரசு இயக்குகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். <


