News January 18, 2026
திமுக திட்டங்களை பாராட்டிய EPS: அமைச்சர் ரகுபதி

திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே ‘காப்பி பேஸ்ட்’ <<18879251>>வாக்குறுதியாக <<>>EPS அறிவித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். திமுகவின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக EPS மறைமுகமாகப் பாராட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
சிகரெட்டை நிறுத்தணுமா? நச்சுனு ‘3’ டிப்ஸ்

புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க ➤நிக்கோட்டின் சாக்லெட்/சூயிங்கம் போன்றவற்றை முயற்சிக்கலாம் ➤டென்ஷன் காரணமாக புகைப்பிடிப்பவர் என்றால், அதற்கு பதிலாக யோகா, தியானம், மூச்சு பயிற்சியில் கவனம் செலுத்தலாம் ➤ஒரு சிகரெட் பிடித்தால், மேலும் இன்னொரு சிகரெட்டும் பிடிக்கத் தோன்றும். அதனால் அந்த எண்ணத்தையே கட்டுப்படுத்துங்க. SHARE.
News January 31, 2026
EPS இலவச செல்போன் கொடுத்தாரா? CM ஸ்டாலின்

திமுகவின் வாக்குறுதிகளைதான் EPS அப்படியே காப்பி அடித்து, தேர்தல் வாக்குறுதியாக வழங்கி வருவதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், 2011, 2016-ல் அதிமுக வெளியிட்ட வாக்குறுதிகளை கடைசிவரை நிறைவேற்றவே இல்லை எனவும் சாடியுள்ளார். குறிப்பாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன், 55 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் எங்கே எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
News January 31, 2026
தங்கம் விலை குறைவதற்கு இவர்தான் காரணம்

தங்கம், வெள்ளி விலையில் <<19009806>>மாற்றங்கள்<<>> நிகழ முக்கிய காரணமாக கெவின் வார்ஷ் கருதப்படுகிறார். இவர் US மத்திய வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப் அவரை நியமித்ததிலிருந்து சந்தை சரிந்து வருகின்றன. இதனால்தான் தங்கம், வெள்ளி விலையில் தடாலடி மாற்றங்கள் நிகழ்கின்றன. இவர் டாலரை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதால் வரும் நாள்களில் தங்கம் விலை குறையும் என்கின்றனர்.


