News May 6, 2024

திருச்சி:தேர்ச்சி விகிதம் 95.74 சதவீதமாகும்

image

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை இதில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.44.அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 95.74 சதவீதமாகும். +2 தேர்வினை 29,615 மாணவர்கள் எழுதிய நிலையில், 28, 354 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 27, 2025

திருச்சி: வேலை தேடுவோர் கவனத்திற்கு!

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருவருக்குமான வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆக.,31ஆம் தேதி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 0431-2412726 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

திருச்சி: 1,317 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

image

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டதன் மூலம் மொத்தம் 1,317 பள்ளிகளில் 80,129 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

திருச்சி: வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது ஆக.27 மற்றும் செப்.1, 6 ஆகிய தேதிகளில் திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!