News January 18, 2026

தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்ற RCB

image

WPL-லில் RCB-க்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடி DC 166 ரன்களை எடுத்தது. அந்த அணியில், ஷபாலி (62) மற்றும் லூசி(36) சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய RCB அணியில், கேப்டன் ஸ்மிருதி அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்தார். இதனால் 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தலான வெற்றியை RCB பதிவுசெய்தது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் அந்த அணி உள்ளது.

Similar News

News January 30, 2026

தமிழக தேர்தல்.. விரைவில் முக்கிய அறிவிப்புகள்

image

தமிழக தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், பிப்.13 (அ) 16-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட திமுக அரசு திட்டமிடுகிறதாம். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அறிவிப்பு இடம்பெறலாம் என்ற இனிப்பான செய்தியும் வெளியாகியுள்ளது.

News January 30, 2026

விஜய் கட்சியுடன் கூட்டணியா?

image

தவெகவுடன் கூட்டணி பற்றி தான் இன்னமும் எந்த முடிவுக்கும் வரவில்லை என கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தவெகவுடன் கூட்டணியில் புதிய தமிழகம் சேரப்போவதாக வரும் தகவலுக்கு பதிலளித்த அவர், இதுவரை தவெக தரப்பில் இருந்து யாரும் தன்னுடன் பேசவில்லை எனவும், தானும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அத்துடன் அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பனோ இல்லை எனவும் கூறியுள்ளார்.

News January 30, 2026

BREAKING: பிப்.5-ல் அமைச்சரவைக் கூட்டம்

image

CM ஸ்டாலின் தலைமையில் வரும் 5-ம் தேதி அமைச்சரவைக் கூடுகிறது. பிற்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

error: Content is protected !!