News January 18, 2026
TN காங்கிரஸ் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
இந்த வார ஓடிடி ட்ரீட்!

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க பல படங்கள், வெப்சீரிஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன *பிரபாஸின் ‘ராஜாசாப்’ : பிப்.6, ஜியோ ஹாட்ஸ்டார் *சரத்குமாரின் ‘கொம்புசீவி’ : பிப்.6, டெண்ட்கொட்டா *மகேந்திரனின் ‘ நீலகண்டா’: பிப்.6, சன் நெக்ஸ்ட் *’பராசக்தி’: பிப்.7, ஜீ5 *ஷர்வானந்தின் ‘நாரி நாரி நடுமா முராரி ‘: பிப்.4, அமேசான் பிரைம் * ‘The Investigation of Lucy Letby’: பிப்.4, நெட்பிளிக்ஸ்
News February 4, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 601
▶குறள்:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
▶பொருள்: ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.
News February 4, 2026
ஜல்ஜீவன் திட்டம்.. நிதியை நிறுத்திய மத்திய அரசு

ஜல்ஜீவன் திட்டத்தில் மீதமுள்ள பணிகளுக்கான நிதியை நிறுத்துவதாக ராஜ்ய சபாவில் மத்திய அரசு கூறியுள்ளது. 2019-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு ₹2.09 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 81.5% பணிகள் நிறைவுபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் முறையாக நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, மீதமுள்ள பணிகளுக்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என கூறியுள்ளது.


