News January 17, 2026
பள்ளி மாணவர்களுக்கு மேலும் 3 நாள்கள் விடுமுறை

ஜன.14 – 18 வரை பொங்கல் விடுமுறையை பள்ளி மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 4-வது வாரத்திலும் 3 நாள்கள் விடுமுறை வருகிறது. அதாவது, ஜன.26 குடியரசு தினம் திங்கள்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறை வருகிறது. இதனால் இந்த மாதமே விடுமுறை மாதம் தான் என மாணவர்கள் சிலாகிக்கின்றனர். எனவே, வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பெற்றோர், இதற்கேற்ப முன்பதிவு செய்யுங்கள்.
Similar News
News February 8, 2026
டிகிரி போதும்.. வங்கியில் ₹48,480 சம்பளம்

SBI-ல் 2050 Circle Based Officers பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இவற்றில் தமிழகம் & புதுச்சேரியில் 165 பணியிடங்கள் உள்ளன *வயது: 21- 30 *கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, Medicine, Cost accounting, Chartered accounting *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் & உள்ளூர் மொழித் திறன் தேர்வு * வரும் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹48,480 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News February 8, 2026
தங்கம் விலை பெரிய அளவில் குறைகிறது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயராமல் மந்த நிலையில் நீடிக்கிறது. குறைந்த கால முதலீடு நோக்கில் தங்கம் வாங்கி குவித்தவர்கள் பலரும், தற்போது அதனை விற்பனை செய்து வருவதால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. அதன் தாக்கமே சந்தையில் 1 அவுன்ஸ்(28g) ஒரு வாரத்தில் சுமார் $700 வரை குறைந்தது. தற்போது($4,887) என்ற நிலையில் நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் நாளை தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.
News February 8, 2026
நானே பேசுறதில்ல, உங்களுக்கு என்ன: செல்வப்பெருந்தகை

திமுக கூட்டணியில் தான் காங்., உள்ளது என செல்வப்பெருந்தகை உறுதிப்படுத்தியுள்ளார். கூட்டணி குறித்து மாநிலத் தலைவரான தானே பேசவில்லை என்ற அவர், மா.செ.,க்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக்கு எதிராக பேசுபவர்களை காங்., தலைமை பார்த்துக்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக – காங்., கூட்டணியிடையே புகைச்சல் உண்டான நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.


